இன்று விற்பனைக்கு வருகிறது நோக்கியா 6.1 பிளஸ் ஆண்ட்ராய்டு மொபைல்!!

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இன்று விற்பனைக்கு வருகிறது நோக்கியா 6.1 பிளஸ் ஆண்ட்ராய்டு மொபைல்!!

nokia 6.1 plus mobile is out for sale today in flipkart: know the price, offers and features

நோக்கியா மொபைல் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைலான, நோக்கியா 6.1 பிளஸ் இன்று மதியம் 12 மணியளவில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

சர்வதேச அளவில் பிரபல மொபைல் நிறுவனமான நோக்கியா, கடந்த வாரம் நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் ஆகிய இரண்டு மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், அதில் நோக்கியா 6.1 பிளஸ் மாடல் மொபைல் இன்று மதியம் 12 மணியளவில் பிளிப்கார்ட் மற்றும் நோக்கியாவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது.விலை:

நோக்கியா 6.1 பிளஸ் மாடல் இந்தியாவில் ரூ.15,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ரெட்மீ மொபைலின் நோட் ப்ரோ 5 மொபைலுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

அம்சங்கள்:

ரேம்: நோக்கியா 6.1 பிளஸ், 4ஜிபி ரேம் 64ஜிபி இன்டர்நெல் மெமரி என்ற ஒரே ஒரு ரேம் வகையில் மட்டுமே வருகிறது. அதன் எக்ஸ்டர்னல் மெமரியை 400 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ளலாம்.சிம்: இதில், இரண்டு சிம்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு நேனோ சிம்களை உபயோகிக்கலாம்

இயங்குதளம்: இந்தப் போன் ஆண்ட்ராய்டின் புதிய வெர்சனான 8.1 ஓரியோவில் இயங்கிறது. இதை நீங்கள் புதுப்பித்துக்கொள்ள முடியும். அதுதவிர, இதில் Qualcomm Snapdragon 636 SoC பயன்படுத்தப்பட்டுள்ளது.திரை மற்றும் பேட்டரி: நோக்கியா 6.1 பிளஸ் மொபைலின் திரை 5.8 இன்ச் நீளம் கொண்டது. இதனால், இதைப் பயன்படுத்த எளிதாக இருக்கும். பேட்டரி 3060mAh சக்தி கொண்டது, இது ஓரளவிற்கே நீடிக்கும் என்றாலும், விரைவில் சார்ஜ் ஆகும் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேமரா: இதன் பின்பக்கம் 16 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமராவும், 5 மெகாபிக்சல் கொண்ட மோனோகுரோம் சென்சாரும் உள்ளதால், கேமரா தரம் நன்றாகவே உள்ளது. முன்பக்கம் 16 மெகாபிக்சல் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஃபர்கள்:

ஜியோ பயனர்கள் ரூ.199, ரூ.249 அல்லது ரூ.448க்கு ரீசார்ஜ் செய்யும்போது, மாதத்திற்கு 20ஜிபி வீதம் 12 மாதத்திற்கு 240 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும். அதுதவிர, ரூ.50 மதிப்புள்ள 36 கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இதன்மூலம், ரூ.1800 கேஷ்பேக் கிடைக்கும். பிளிப்கார்ட்டில் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 5% தள்ளுபடியும், ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி, ஈஎம்ஐ இல் வாங்கினால் 5% தள்ளுபடியும் பெறலாம்.Tamil Kalakkal News websites industry that delivers up to minute , accurate and quality Tamil Kalakkal related news and updates. Being the youngest website in the industry,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*